Wednesday, May 29, 2013

கொங்கு மக்கள் பெரும்பான்மை ஹிந்துக்களா? சிறுபான்மை கன்னட லிங்கங்கட்டி பண்டாரங்களா?

நமது பாரத நாட்டில் உள்ள ஒவ்வொரு இன/சாதிக்கும் ஒவ்வொரு தர்மம் உள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் அதற்கென ஒரு மத அடையாளத்தை  ஏற்படுத்தத் தவறவில்லை. அவ்வாறு கொங்கு நாடு மற்றும் தென்னகத்தில் என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பது பற்றிய ஆராய்ச்சி இது.


ஸ்மார்த்தர்:

 சைவம், வைணவம் முதலான அறுவகை சமயங்களை சங்கரர் பிரிக்கும் முன்பே ஒன்றுபட்ட முறையை, அதாவது இஷ்ட தெய்பாடு இருப்பினும், சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளவாறு பிற குழுக்களை வெறுக்காது பொதுப்படையான வழிபாடான முறையை பின்பற்றுபவர்கள். இளங்கோவடிகள் போன்றோரும், சங்க நூலாளரும் அனைத்து கடவுள்களையும் போற்றுவது போலவே இன்றும் வழிபாடு நடத்துபவர்கள். கொங்கு நாட்டின் குல குருக்களான  வைதீக  பிராமணர்கள், சிவ துவிஜர்கள் (சிவ பிராமணர்கள்/ ஆதிசைவர், குருக்கள்), தேசிகர்கள், பிராமணரல்லாத குருக்கள்  என வேறுபட்டாலும் அனைவரும் சங்கரர் வழியிலேயே அனைத்து வைதீக கடவுள்களையும் சமமாகவே பாவித்தாலும், கிட்டத்தட்ட அனைவருமே வைதீக சைவ முறைப்படி திரிபுண்டரம் (விபூதி / திருநீறு/ பட்டை) போடுவதையே செய்கின்றனர். நாமம் போட்டவர்கள் கொங்கு நாட்டு பூர்வ குடி அல்லாதோர் என்பது திண்ணம் (சில வைணவ கோயில் பட்டாச்சாரியார்களைத்தவிர). அதற்காக கொங்கு மக்கள் நாமம் போடமாட்டார்களா என்றால் நாமக்கட்டியை குழைத்து பட்டை போல இடுகிறார்களே தவிர உர்துவ புண்டரமாக (நாமமாக) அணிவதில்லை. பின்னால் வந்த களப்பிரர்கள், வடுக வேடுவர், தெலுங்க - கன்னடியர், மார்வாடிகள் ஆகியோர் வேண்டுமெனில் பிறகுறியீடுகளை அணிகின்றனர். ஆச்சரியம் என்னவெனில், இங்கு இருக்கும் சமணர் கோயில்  (பூந்துறை, வெள்ளோடு, திங்களூர், ஆலத்தூர், சீனாபுரம் (ஜீனாபுரம்), விஜயமங்கலம் ) பூசாரிகள் (ஜைன பிராமணர்கள்) கூட விபூதியே தருகின்றனர்/ அணிகின்றனர். மோளிப்பள்ளி அண்ணமார் கோயில், கொல்லிமலை மாசி மலை பெரியண்ண சாமி  கோயில் போன்ற கோயில்களில் பெருமாளே விபூதிதான் அணிந்துள்ளார். சங்கரர் கொங்கு நாடு வழியாக செல்கையில் சாணார் (மரம் ஏறுபவர் )  ஒருவரிடம் மரத்தை வளைக்கும் மந்திரம் பயின்றதாக பல பட்டயங்கள் சொல்கின்றன. கொங்கு நாட்டினில் அனைத்து பூர்வ குடிகளும் போதாயன சூத்திரத்தையே தமது வாழ்வியல் முறையாக தொன்றுதொட்டு கடைபிடிப்பது பல இலக்கிய/ வாழ்க்கைமுறை விசயங்களால் உறுதியாகிறது. மேலும் இங்குள்ள அனைத்து காணி சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலுக்கு பேதங்களில்லாமல் பூர்வ குடிகள் செல்கின்றனர். பெரும்பாலான இடங்களில் விநாயகர், முருகர்,  சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஒன்றாக இருப்பதனைக் காணலாம். நவக்கிரக வழிபாடு, தொண்டர் வழிபாடு (நாயன்மார், ஆழ்வார்) சிலை வடிவங்களில் ஒரு நூறு வருடங்களுக்குள்தான் ஏற்பட்டுள்ளது என்பது சிலைகலைக் கண்டாலே தெரியும். இது தமிழ்நாட்டில் இருந்து தற்பொழுது ஆன் டிமாண்டால் வந்தது என்பதும் பலரும் அறிவர். கிட்டத்தட்ட  எல்லா காணி கோயில்களில் சிவனும் பெருமாள் கோயில்களும் ஒரே சுவற்றுள் உள்ளதையும் , அதற்கு ஸ்தானிகரான சிவாச்சாரியாரே புகை செய்வதையும் காணலாம். சிறிது பேமஸான பெரிய கோயில்களில் மட்டும் பட்டாச்சாரியார்கள் பெருமாளுக்கென உள்ளனர். இதனைப்பற்றி கேட்கையில் பல பெரியோர்கள் கூறியது:
"கொங்கு நாடே பழைய சேர நாடு. இந்நாட்டின் தலைமை பீடம் பாசூரிலுள்ள தீக்ஷதர் மடம் என்றனர். நானும் பாசூர் சென்று பார்த்தேன். அங்கு திருவானைக்காவலில் வாரிசுகள் உள்ளனர் என்று அறிந்து அங்கு சென்றேன். அங்கிருந்த தீக்ஷதர்  கூறையில், ஆதியில் சேர நாட்டுக்கு ராஜகுருவாக ஸத்தியோஜாதமான பாசூர் மடமும், சோழ நாட்டுக்கு கும்பகோணத்திலும், பாண்டி நாட்டிற்கு ஈசானமான கிளா (கலா) மடமும், தொண்டை நாட்டிற்கு ஆகோர மடமான நெருஞ்சிபேட்டை மடமும் என்று அழகாக ஆதாரங்களுடன் விளக்கினார். இன்றும் தமிழக பூர்வ குடியினர் இம்மடங்களைதான் குலகுருக்களென கொண்டுள்ளதாக கூறினார். அவர் தந்தது இதோ:

சேர கொங்கு  நாடு: பாசூர் (சத்யோஜாத சிவ முகம்) மடம் - சேர மன்னர், கொங்கு வேளாளர், கொங்கு செட்டியார், கொங்கு கருணீகர் முதலானோர்.

பாண்டி நாடு: ஈசான சிவ முக கிளா (கலா) மடம் - பாண்டிய மன்னர், பாண்டி செட்டிகள் (நாட்டரசன்கோட்டை செட்டியார்கள்), முதலானோர்.

தொண்டை மண்டலம் : அகோர சிவமுக நெருஞ்சிபெட்டை மடம்: தொண்டை மண்டல வேளாளர், தொண்டை மண்டல செட்டிகள் (நெய்க்காரர், வாணியர் முதலானோர்).

இம்மடங்களுக்குக் கீழ் பல சிவ பிராமண, சைவ பண்டார மடங்களும் உள்ளனர்.

இவர்களே பொதுவாக தத்தம் பகுதிகளில் சங்கரருக்கு முன்பிருந்து ஆட்சி செலுத்தினர் எனவும், சைவ - வைணவ பூசல்கள் பெரும்பாலும் சோழ நாட்டில் காபாலிகர், காளாமுகர், வீர சைவர்களும் (லிங்காயத்துகள்), வீர வைணவர்களும் (பெருமாள் மட்டுமே பிரிவு) ஆகிய பாஷாண்டிகள் (வெறியர்கள்) மட்டுமே என அறிகிறோம்.


http://archive.org/stream/castestribesofso01thuriala#page/34/mode/2up

http://archive.org/stream/p1salemrich01richuoft#page/145/mode/2up n 4

பார்க்க (புக்கனான் மதறாஸ், கனரா, மைசூர் புத்தகம்):
http://archive.org/stream/journeyfrommadra02hami#page/329/mode/2up

http://en.wikipedia.org/wiki/Smartha#Differences_with_other_Hindu_denominations

http://www.sripudhuvangalamman.net/ta/mangalavalthu-ta

"வேதியன் பக்கமே விரைவுடன் சென்று"
"மறையோர்கள் வேதம்சொல்ல மற்றவர்கள் ஆசிகூற"
"வேதம் ஓதிடும் வேதியர் வாழி"

கொங்கு மண்டல சதகம் (கார்மேகக் கவிஞர்):
http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=69

"சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும் 
முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன. 
அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர் 
களாயும், நாட்டுக் குருத்வமுடையவர்களாயும் இருக்கிறார்கள். புதியவர்கள்
பாடல் பெற்ற தலங்கள், மற்றும் பிரதான ஆலயங்களில் அர்ச்சகர்களாயும்
ஆசாரியத்வமுடையர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்."

கொங்கதேச பூர்வகுடிகளான பதினெட்டு குடிகள் ஸ்மார்த்த தர்மத்தினர் என்பதற்குப் புலவர் ராசுவின் ஆய்வு ஒப்புதல் கடிதம்:
குருக்களும் ஸ்மார்த்தர்களே:


மேலும் சிருங்கேரி சங்கராச்சார்யருக்கும் பழனி குருக்களுக்கும் உள்ள தொடர்பு : https://www.youtube.com/watch?v=YCUJzYmYHA4


ஸ்ரீ வைஷ்ணவர்: 

பெரும்பாலும் தெலுங்கர்களும், கன்னடியர்களுமே இம்மதத்தில் உள்ளனர் எனினும், இவர்களது குல தெய்வங்கள் பட்டை போடுவதால், இவர்களும் ஒருகாலத்தில்  மாறியவர்களே என அறியலாம். உதா: தொட்டி நாயக்கர், நாயுடு போன்றோர் .

கொங்கு நாட்டினை அடிமைப்படுத்த வந்த புறச்சமயமான கன்னட வீர சைவர்:

கொங்கு நாட்டில் மலைப்பகுதியிலுள்ள லிங்காயத்துகள் கன்னடியராவர். சில தேவாங்க செட்டிகளும், அரச பள்ளி (வன்னியர்), சில ஒக்கலியரும்  ஒரு பிரிவிநறும் உள்ளனர். மலை மக்களுக்கு சாலூர் மடம் (மாதேஸ்வர மலை), துரோணகிரி மடம் (பர்கூர் ) எனவும், வன்னியருக்கு அந்தியூர் பள்ளி சாமி மடமும், குடி ஒக்கலியர் பெரும்பான்மையினர் காரமடை சுவாமிகள் மடத்திற்கு மதம் மாறி விட்டாலும், வெகு சிலர் பேரூர் சாந்தலிங்கர் மடமே பூர்வீக மடமென்றும், தற்பொழுது  சம்மந்தமே இல்லாத வெள்ளாள கவுண்டர்கள் கைபற்றி அரசியல், பண செல்வாக்கினால் அதனை கவுண்டர் மடம் போல காட்டுவதாகவும் கூறினர். விசாரிக்கையில், இன்றும் இவ்வேள்ளாள கவுண்டர்கள் கன்னட லிங்காயத்துகளாக மதம் மாறி பட்டம் வைத்துக் கொள்கின்றனர் என்றனர். ஒரு போட்டோவையும் அனுப்பினர்.


சைமன் செபஸ்டியன், சிவலிங்கம் மற்றும் அடிகளார்: 
இவர்கள் மாரில் அணிந்துள்ள குப்பியில் லிங்கம் கன்னட முறைப்படியினதாகுமென்று கூறுகின்றன்ர் .   கன்னட பாசாண்ட மதமான இதற்க்கு மாறியவர்கள் ஜங்கம பண்டாரங்கள், லிங்கங்கட்டி பண்டாரங்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

http://www.thehindu.com/news/national/karnataka/lingayat-mahasabha-sets-december-30-as-deadline-on-demand/article20556253.ece&grqid=QYuUkadr&hl=en-IN/

கொங்கு மக்களை சிறுபான்மை கன்னட லிங்காயத்துகளாக மாற்ற பேரூர் அபகரிப்பு சாமியார் Illuminati யோடு சதி.

கொங்கு மக்கள் லிங்கங்கட்டிகளல்ல.
தமிழுக்கு பாரதத்தை கொணர உதவிய
கொங்கு மன்னன் வரபதி ஆட்கொண்டான் கன்னடர்களின் இம்மதத்தை எதிர்த்தான் என்பது :


எங்கும் இவன் இசை பரப்பி வரும் நாளில்,
   யாம் உரைத்த இந்த நாட்டில்,

கொங்கர் குல வரபதியாட்கொண்டான் என்று்,
   ஒரு வண்மைக் குரிசில் தோன்றி,
வெங் கலியின் மூழ்காமல், கருநடப் பேர்   வெள்ளத்து விழாமல், நான்காம்
சங்கம் என முச் சங்கத் தண் தமிழ் நூல்
   கலங்காம்ல, தலைக்கண்டானே.

http://en.wikipedia.org/wiki/Lingayatism

கொங்கரை பெரும்பான்மை ஹிந்து ஸ்மார்த்த மதத்திலிருந்து, சிறுபான்மை கன்னட லிங்காயத் Illuminati கைக்கூலி "தொழிலதிபர்"கள் அடியாள் மதத்திற்கு மாற்ற சதி:

http://www.thehindu.com/news/cities/Coimbatore/charitable-hospital-project-launched-at-annur/article7748716.ece